பி.கே.சேகர்பாபு

மக்கள் பணிக்கே அரசியல் பொறுப்பு

மனித வாழ்க்கை என்பது உழைப்பால் ஆனது.

உழைப்பை பிறருக்காக உழைப்பது என்பது மகத்தானது.

மக்களோடு வாழ்வது; மக்களுக்காக வாழ்வது என்ற இரு பண்பையும் தன் வாழ்வாகக் கொண்ட மாண்பு உடையவர்கள் வெகுசிலரே. அந்த வெகுசிலரில் மிக முக்கியமான மனிதனாக வாழ்ந்து வருபவர் துறைமுகம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் சென்னை கிழக்கு மாவட்ட

செயலாளர் திரு பி.கே.சேகர்பாபு ஆவார்.

உலகம் வியக்கும் ஒப்பற்ற தலைவர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களை தலைவராக ஏற்று தி மு கழகத்தில் இணைந்து இணைத்துக் கொண்டு தமிழகத்தின் எதிர்காலம் அன்புத் தளபதி அவர்களின் வழி நடப்பவர்தான் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள்.

இனத்திற்காகவும், மொழிக்காகவும், சமூக நீதிக்காகவும் இயங்கி வரும் அறநெறி இயக்கமான திமு கழகம் தந்த பணியை தலைமேற்கொண்டு செய்து முடிக்கும் செயல் வீரர் தான் சேகர்பாபு.

தலைவர் கலைஞர், இனமானப் பேராசிரியர், அன்றைய பொருளாளர் இன்றைய தலைவர் தளபதி ஆகியோரின் ஆசியோடு 2015ல் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளராக பொறுப்பேற்றார்.

மாவட்ட செயலாளராகவும், துறைமுகம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் தொடர்ந்து செயல் புரியும் பி.கே,சேகர்பாபு அவர்கள் கடமையை கண்ணாகவும், களப்பணியை வாழ்வாகவும் கொண்டு இயங்கி வருகிறார்.

வாக்களித்தோர் அளிக்காதோர் என்ற பாரபட்சமின்றி சகலரும் சகோதரரே என அவர்கள் உயர்விற்கு தோளோடு தோள் நின்று கழகத் தலைவருக்கும் தான் சார்ந்த இயக்கத்திற்கும் பெருமை சேர்க்கும் இவர்.

ஓயாத பணியால் உயர்ந்தவர்!

உறங்காது தினமும் உழைப்பவர்!!

அவர் பணி மக்கள் மனதை விட்டு ஒருபோதும் அகலாது!

கடமையாற்றும் கண்ணியத்தை உலகம் ஒருபோதும் மறவாது!!

வாழ்க அவரின் இதயம்!

வெல்க தி மு கழகம்!!