பி.கே.சேகர்பாபு
மக்கள் பணிக்கே அரசியல் பொறுப்பு.
மனித வாழ்க்கை என்பது உழைப்பால் ஆனது.
உழைப்பை பிறருக்காக உழைப்பது என்பது மகத்தானது.
மக்களோடு வாழ்வது; மக்களுக்காக வாழ்வது என்ற இரு பண்பையும் தன் வாழ்வாகக் கொண்ட மாண்பு உடையவர்கள் வெகுசிலரே. அந்த வெகுசிலரில் மிக முக்கியமான மனிதனாக வாழ்ந்து வருபவர் துறைமுகம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் சென்னை கிழக்கு மாவட்ட
செயலாளர் திரு பி.கே.சேகர்பாபு ஆவார்.மக்கள் பணிக்கே அரசியல் பொறுப்பு
சமூக சேவையில் சிறந்த சட்டமன்ற உறுப்பினர்
தொகுதியில் ஒவ்வொரு பகுதியிலும் பிரச்சனை இருக்கும். அப் பிரச்சனைகளை நேரில் சென்று ஆய்வு செய்தும், அதன் தன்மைக்கேற்ற தீர்வுகளையும் உடனடியாக மேற்கொண்டு வருகிறார். அரசால் மட்டுமே தீர்க்க முடியும் எனும் தலையாய வேண்டுதல்களை சட்டசபைக்கு எடுத்துச்சென்று திறம்பட வாதாடி உரிய முறையோடு உரிய காலத்தில் நிறைவேற்றி வருகிறார். குடிநீர் கொண்டுவருதல். தூய்மைப் பணியை நிறைவேற்றுதல், பள்ளி, கல்லூரி அலுவலகங்களில் ஏற்படும் சிக்கல்களை களைவதோடு புதிய தேவைகளை கேட்டறிந்து செயல்படுத்துவதில் சிறந்த சேவகராய் விளங்கி வருகிறார்.
மதிப்புறு மாவட்டக் கழகச் செயலாளர்
கழகத் தலைவர் தளபதி அவர்களின் வாழ்த்துகளோடு சென்னை கிழக்கு மாவட்ட செயலாளராக பொறுப்பேற்று மாநில, மாவட்ட நிர்வாகிகளை அணுகி செயல்திட்டங்களை வகுப்பதும், பகுதி மற்றும் கிளை நிர்வாகிகளை கலந்து கழகப் பணியாற்றுவதில் மதிப்புறு மாவட்டச் செயலாளராக தன்னை முன்னிறுத்தி வருகிறார். முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் பிறந்த நாளையும், கழகத் தலைவர் தளபதியின் பிறந்த நாளையும் வியப்புறும் விழாக்கள் நடத்தி அறிவுசார் திருவிழாவாகவும், திராவிட இயக்க பிறந்தநாள், தந்தை பெரியார் பிறந்த நாள், பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் மூன்றையும் இணைத்து முப்பெரும் விழாவை நடத்தி விழாக்களின் நாயகராக விளங்குவதில் இவருக்கு நிகர் இவரே.
கடமையே கண்ணாக கொண்ட களப்போராளி
மக்கள்குறை தீர்ப்பதும், தீர்வு நோக்கி களம் காண்பதும் இவரின் அளப்பரிய அன்றாட செயல்கள். தொகுதி பிரச்சனைகள் எதுவாயினும் உடனுக்குடன் இரவு பகல் பாராது செய்து முடிப்பதில் தன்னிகரற்றவர். தொகுதியின் தேவைகளை நிறைவேற்றுவதும், சட்டமன்றத்தில் பேசி பெற்றுத்தருவதும் இவரின் அரசியல் செயல்பாட்டின் ஆகச்சிறந்த முன்னுதாரணமாய் திகழ்ந்து வருகிறார், CAA போராட்டம், விவசாய மசோதா எதிர்ப்பு போராட்டம், என கழகம் முன்னெடுத்த. மாபெரும் அரசியல் களத்தில் வியக்க வைக்கும் பணியாலும், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி பெருமை சேர்த்ததும் இவரின் ஆற்றல் மிக மிக பாராட்டத்தக்கது.