தொகுதியில் ஒவ்வொரு பகுதியிலும் பிரச்சனை இருக்கும். அப் பிரச்சனைகளை நேரில் சென்று ஆய்வு செய்தும், அதன் தன்மைக்கேற்ற தீர்வுகளையும் உடனடியாக மேற்கொண்டு வருகிறார். அரசால் மட்டுமே தீர்க்க முடியும் எனும் தலையாய வேண்டுதல்களை சட்டசபைக்கு எடுத்துச்சென்று திறம்பட வாதாடி உரிய முறையோடு உரிய காலத்தில் நிறைவேற்றி வருகிறார். குடிநீர் கொண்டுவருதல். தூய்மைப் பணியை நிறைவேற்றுதல், பள்ளி, கல்லூரி அலுவலகங்களில் ஏற்படும் சிக்கல்களை களைவதோடு புதிய தேவைகளை கேட்டறிந்து செயல்படுத்துவதில் சிறந்த சேவகராய் விளங்கி வருகிறார்.
தொகுதியில் தொடர்ந்து மருத்துவ முகாம்கள் நடத்தியும் சிறந்த மருத்துவர்கள் செவிலியர்களை கொண்டு நோய்களை குணப்படுத்துவதற்கான அத்தனை ஏற்பாடுகளும், கண்சிகிச்சை, பல்மருத்துவம் பொது மருத்துவம் போன்ற முகாம்கள் நடத்தி நோயற்று வாழ களச் சேவை செய்கிறார். கர்ப்பிணிப் பெண்களுக்கு மாதாமாதம் மருத்துவ முகாம் நடத்தி குடும்பத்தில் ஒருவராய் சீர்வரிசை கொடுத்தும், சீமந்தம் நடத்தியும் மகப்பேறு பார்ப்பதோடு பிறந்த மழலைக்கு புத்தாடையும் நிதியும் கொடுத்து உற்ற சகோதரனாய் உதவி புரிகிறார், மாணவர் தம் கல்விக்கான கவலையை தீர்ப்பதற்காக பள்ளி; கல்லூரியில் படிக்கும் 2000 மாணவர்களுக்கு வருடா வருடம் கல்விக்கான உதவித் தொகையும், படிப்பிற்கான உபகரணங்களும், ஏழை எளிய மாணவர்களுக்கு இலவசமாக கணினியும் வழங்கி இதயத்தில் இடம் பெற்றவர்தான் பி.கே, சேகர்பாபு அவர்கள்.
அனிதா பயிற்சி மையத்தின் மூலம் கொளத்தூர் தொகுதியில் பெண்களின் முன்னேற்றத்திற்கு வித்திட்ட கழகத் தலைவர் பாதையில் துறைமுகம் தொகுதியில் தயாளு அம்மாள் பயிற்சி மையம் உருவாக்கி பெண்களுக்கு தையல் பயிற்சி வழங்கி தையல் எந்திரமும்,கணினி வகுப்பில் டாலி (TALLY) பயிற்சி தந்து மடிக்கணினி வழங்கி வேலை கிடைக்கச் செய்தும், அழகுக்கலை பயிற்சி வழங்கி அத் தொழிலுக்கு ஏற்ற பொருட்களும் வழங்கி பெண்களை தன் சொந்தக் காலில் சுயமரியாதையோடு வாழும் வகை செய்து வருகிறார் துறைமுகம் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள்.
எளியோரை உயர்த்துதல் தான் ஏற்ற பதவிக்கு கௌரவம் ஆகுமென்று கணந்தோறும் உழைக்கிறார்.