கழகத் தலைவர் தளபதி அவர்களின் வாழ்த்துகளோடு சென்னை கிழக்கு மாவட்ட செயலாளராக பொறுப்பேற்று மாநில, மாவட்ட நிர்வாகிகளை அணுகி செயல்திட்டங்களை வகுப்பதும், பகுதி மற்றும் கிளை நிர்வாகிகளை கலந்து கழகப் பணியாற்றுவதில் மதிப்புறு மாவட்டச் செயலாளராக தன்னை முன்னிறுத்தி வருகிறார்.
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் பிறந்த நாளையும், கழகத் தலைவர் தளபதியின் பிறந்த நாளையும் வியப்புறும் விழாக்கள் நடத்தி அறிவுசார் திருவிழாவாகவும், திராவிட இயக்க பிறந்தநாள், தந்தை பெரியார் பிறந்த நாள், பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் மூன்றையும் இணைத்து முப்பெரும் விழாவை நடத்தி விழாக்களின் நாயகராக விளங்குவதில் இவருக்கு நிகர் இவரே.
மேற்சொன்ன நிகழ்வுகளில் கவியரங்கம், பட்டிமன்றம்,இசை அரங்கம், கருத்தரங்கம், என அழகிய ஆராவார நிகழ்வாக்குவதோடு, கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கியும், நலத்திட்ட உதவிகள் செய்தும், ஆதரவற்றோர் இல்லங்களுக்கு அன்புகொண்டு உதவுவதும் என பார்த்துப் பார்த்து அகம் நெகிழ அரவணைப்பது இவரின் அரிய பண்பாகும்.
ரமலான், கிறிஸ்துமஸ், பொங்கல், தீபாவளி என அனைத்து மத விழாக்களையும் மதநல்லிணக்க நிகழ்வாக மாற்றி இதயத்தால் இணங்குவது பி.கே சேகர்பாபுவின் சிறப்பு அம்சமாகும்.
தன்னிகரற்ற தலைவர் கலைஞர் மறைந்த தினத்தில் இருந்து ஒவ்வொரு நாளும் அவர் நினைவிடத்தில் பூக்களால் அலங்கரித்து வணங்கி மரியாதை செய்து தன் பணி செய்வதை வழக்கமாக கொண்டுள்ள அவரின் செயல் சிலிர்ப்பூட்டும்.
அரசியல் சூழலுக்கு ஏற்ப பொது நிகழ்வுகளும், பொதுமக்களை சந்தித்து குறைகேட்டு தீர்ப்பதும் இவர் பணி மேன்மையின் சிறந்த உதாரணங்களாகும்.