பி.கே.சேகர்பாபு

கடமையே கண்ணாக கொண்ட களப்போராளி

மக்கள்குறை தீர்ப்பதும், தீர்வு நோக்கி களம் காண்பதும் இவரின் அளப்பரிய அன்றாட செயல்கள். தொகுதி பிரச்சனைகள் எதுவாயினும் உடனுக்குடன் இரவு பகல் பாராது செய்து முடிப்பதில் தன்னிகரற்றவர். தொகுதியின் தேவைகளை நிறைவேற்றுவதும், சட்டமன்றத்தில் பேசி பெற்றுத்தருவதும் இவரின் அரசியல் செயல்பாட்டின் ஆகச்சிறந்த முன்னுதாரணமாய் திகழ்ந்து வருகிறார்.

CAA போராட்டம், விவசாய மசோதா எதிர்ப்பு போராட்டம், என கழகம் முன்னெடுத்த. மாபெரும் அரசியல் களத்தில் வியக்க வைக்கும் பணியாலும், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி பெருமை சேர்த்ததும் இவரின் ஆற்றல் மிக மிக பாராட்டத்தக்கது.

இயற்கை பேரிடர் நிகழ்ந்த போதெல்லாம் இதயம் துடித்து துயரிலிருந்து மக்களைக் காக்க கண்துயிலாது களப்பணி ஆற்றிய கழகத் தலைவர் வழியில் மக்களின் அன்றாட வாழ்வாதாரங்களை பூர்த்தி செய்து மக்கள் முகத்தில் புன்னகையை வரவழைத்தவர் நம் கிழக்கு மாவட்ட செயலாளர். தனக்கு கொரோனா தொற்று தாக்கியபோது முறைப்படி சிகிச்சை பெற்று, நலம் பெற்று மீண்டும் நாள் தவறாது தன் சேவையை பன்மடங்காக்கி கழகத் தலைவர் தளபதியின் இதயத்தில் நீங்காத இடம் பிடித்தார்.

"மக்களை அணைத்துக்கொள்,

உன்னை சங்கம மாக்கு,

மானுட சமுத்திரம் நானென்று கூவு"

என்றார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.

பிறருக்காக வாழும் பொதுநல அக்கறை கொண்டோரை காலம் ஒரு போதும் கை விடுவதில்லை அப்படியான மக்கள் பணிக்காக அர்ப்பணிப்போடு வாழ்பவர் தான் பி. கே.சேகர் பாபு.

எதிலும் மறைமுகத் தன்மை இல்லாமல் வாழும்

துறைமுகத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆற்றிவரும் கடமையை போற்றுவோம்!

அவர் அன்பை பகிர்வோம்!!

அனைவரும் மகிழ்வோம்!!!